போயிங் நிறுவனம் 737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எத்தியேப்பியன் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் வகை விமானம் கடந்த 2019-ஆம் ஆண்டில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 157 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்க நீதிமன்றத்தில் விமான விபத்தில் உயிரிழந்த 157 நபர்களுடைய குடும்பத்தினருக்கு போயிங் நிறுவனம் இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 737 மேக்ஸ் வகை விமானம் ஆறே மாதத்தில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது ஆகும்.