பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்…9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அத்துடன் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து அசல் கோளாறு வெளியேறினார். அதன்பின் சென்ற வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 17 நபர்கள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 31வது நாட்களை நெருங்கி இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று வெளியான முதல் புரோமோவில் இந்த வாரம் பேக்கரி டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. ரேம்பிலிருந்து வரும் பொருட்களை போட்டியாளர்கள் கைப்பற்ற முயலும்போது தனலட்சுமி கீழே விழுந்து விடுகிறார். இதற்கு மணிகண்டன்தான் காரணம் என அவர் குற்றம்சாட்டுகிறார். இதனால் அவர்கள் இவருக்கும் இடையில் தகராறு ஏற்பட, மணிகண்டனை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்கின்றனர்.
இருப்பினும் தனலட்சுமி மரியாதை இன்றி பேசுகிறார் எனக்கூறி கோபத்தில் மணிகண்டன், தனலட்சுமி கடையில் இருக்கும் பொருளை எடுக்க முயற்சி செய்கிறார். இத்துடன் புரோமோ முடிவடைகிறது. ஆகவே இவர்களில் யார் குற்றவாளி..? இந்த வாரம் கமல்ஹாசன் இப்பிரச்சினைக்கு குறும்படம் போடுவாரா..? என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.