போகோ ஹராம் என்ற கொடூரமான பயங்கரவாத அமைப்பின் தலைவன் எதிராளிக்கு பயந்து தற்கொலை குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளார்.
போக்கோ ஹராமின் தலைவனான அபூபக்கர் செக்காவ் உயிரிழந்ததாக மற்றொரு இயக்கத்தின் ஆடியோ பதிவின் மூலம் உறுதியாகியுள்ளது. கடந்த மே மாதம் 18ஆம் தேதியன்று அபூபக்கர் கொலை செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இரண்டு தீவிரவாத அமைப்புகள் இடையே மோதல் நடந்துள்ளது.
அப்போது அபூபக்கர் எதிரிகளிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக தானே வெடிகுண்டை வைத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 வருடங்களாக பல தடவை அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நைஜீரிய ராணுவம் ஒரு தடவை அபுபக்கர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியிட்டிருந்தது.
அதன் பின்பு அதனை மறுத்தது. கடந்த 2014ம் வருடத்தில் Chibok என்ற நகரத்தில் பள்ளி மாணவிகள் சுமார் 270 பேரை போகோ ஹராம் கடத்திச் சென்றது. உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பல மாணவிகள் விடுவித்தனர். எனினும் நூற்றுக்கணக்கான மாணவிகள் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதில் சிலர் போகோ ஹராம் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடந்த 2009 ஆம் வருடத்திலிருந்து, அபுபக்கர் ஷெகாவ் தலைமையில், போகோ ஹராம் அமைப்பு நடைபெற்று வருகிறது. இந்த அமைப்பினர், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதிகள் அனைத்திலும் கடத்தல், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை நடத்தியுள்ளார்கள். தற்போது வரை இந்த அமைப்பினர், 30,000 பேரை கொலை செய்துள்ளனர்.