Categories
உலக செய்திகள்

கரடியை கையால் அடித்து விரட்டிய சிங்கப்பெண்.. செல்லப்பிராணிகளை காக்க வீரச்செயல்..!!

அமெரிக்காவில், பெண் ஒருவர் தன் செல்லப்பிராணிகளை தாக்க வந்த கரடியை தன் கையாலேயே அடித்து தள்ளிவிட்டுள்ளார். 

அமெரிக்காவில் இருக்கும் உட்டா மாகாணத்தில் உள்ள எல்லோஸ்டன் தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் சிட்லாலி மோரினிகோ என்ற பெண் வாழ்ந்து வருகிறார். அவரது மகள் ஹேலி மோரினிகோ (17), மூன்று நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அந்த பூங்காவிலிருந்து ஒரு கரடி தன் குட்டிகளுடன் வெளியேறி மோரினிகோவின் வீட்டின் பின் சுவற்றில் ஏறியிருக்கிறது.

அப்போது அந்த மூன்று நாய்களும் கரடியை தாக்க முயற்சித்துள்ளது. இதனால் கரடி குட்டிகள் பதறியடித்து ஓடி இருக்கிறது. எனினும் தாய் கரடி நாய்களை தாக்க முயற்சித்ததால், நாய்கள் சத்தமாக குரைத்துள்ளது. எனவே மோரினிகோ, வீட்டின் பின்புறம் ஓடி வந்து பார்க்கும்போது கரடி தன் பிராணிகளை தாக்க முயற்சிப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளார்.

எனவே வேகமாக ஓடி, தன் கைகளாலேயே கரடியை தாக்கி சுவரிலிருந்து தள்ளிவிட்டிருக்கிறார். அதன் பின்பு கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த காட்சிகள் வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. இதுகுறித்து சிட்லாலி மோரினிகோ கூறியுள்ளதாவது, நான் கரடியை தாக்கி சுவரிலிருந்து தள்ளி விடும் வரைக்கும் எனக்கு அது கரடி என்று தெரியவில்லை. ஒரு மிருகம் குழந்தைகளை தாக்க வருகிறது என்ற பயத்திலேயே அடித்து தள்ளி விட்டதாக கூறியிருக்கிறார்.

Categories

Tech |