திரைப்பிரபலங்கள் தற்போது ‘த்ரோ பேக்’ என்னும் கடந்த காலப் பதிவுகளை, தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதும் அதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருவதும் வழக்கமான ஒன்றாகும்.
தற்போது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் சிறந்த பாடகர்களான லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே ஆகியோரின் குழந்தைப்பருவ கறுப்பு – வெள்ளைப் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இவரின் இந்த பதிவிற்கு முன்பு மங்கேஷ்கர், தனது ஆன்மிக குருவான ஜம்மு மகாராஜா, கவிஞர் நரேந்திர ஷர்மா ஆகியோரின் நினைவு நாளை குறிக்கும் விதமாக ட்வீட் செய்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக பிக் பி லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே ஆகியோரின் குழந்தைப்பருவப் புகைப்படத்தை பதிவிட்டு, ‘இது லதா ஜி, ஆஷா ஜி’ லதா மங்கேஷ்கர் தனது குருக்களை நினைத்து பதிவிட்ட ட்வீட்டை படித்தேன். அதில் அவர் எவ்வாறு அவர்கள் மீது பக்தியும் மரியாதையுடன் இருந்தார் என்று காட்டியது. உடனே, எனக்கு அவர்களுடைய குழந்தைப்பருவ புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும் என்று எண்ணினேன். டெலிபதி’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அமிதாப்பின் இந்த ட்வீட்டால், ரசிகர்கள் பலர் இருவரின் குழந்தைப் பருவ புகைப்படத்தை அதிகமாக லைக் செய்து பகிர்ந்து வருகின்றனர்.
T 3438 – लता जी , और आशा जी के बचपन का चित्र !
आज लता जी के Tweet में पढ़ा कैसे उन्होंने अपने गरुओं को याद किया , और अचानक ये चित्र मुझे मिल गया ! telepathy !! pic.twitter.com/8YLcIPjHRR
— Amitabh Bachchan (@SrBachchan) February 11, 2020