கொரோனாவிலிருந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீண்டுள்ளார்.
சமீபத்தில் சினிமா துறையில் ஜாம்பவானாக விளங்கும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி இந்திய சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்தது.. கொரோனா உறுதி செய்யப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்..
இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார் அமிதாப் பச்சன்.. 2 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என வந்துள்ளது.. தற்போது மருத்துவமனையிலேயே அவர் இருக்கிறார்.. அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.