பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக மகாராஷ்டிரா போலீஸ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். சுஷாந்த் சிங் ராஜ்புத் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்து தொடர்ந்து பீகார் மாநில போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள். 2 முதல் தகவல் அறிக்கைகள்… இரண்டு விசாரணையா ? என்ற சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்திலேயே சிபிஐ விசாரணை தேவை என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
பீகார் அரசு சிபிஐ விசாரணைக்கு நாங்கள் சிபாரிசு செய்கிறோம் என்று பரிந்துரை செய்தார்கள். மத்திய அரசும் சிபிஐ விசாரணை நடத்தலாம் என பரிந்துரையை ஏற்றுக் கொண்டது. ஆனால் மகாராஷ்டிரா அரசு முதல் தகவல் அறிக்கையை மும்பையில்தான் பதிவு செய்யப்பட்டது. பீகாரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை செல்லாது. ஆகவே நாங்கள் பரிந்துரை செய்தால் மட்டுமே சிபிஐ விசாரணை நடத்தலாம், சிபிஐ விசாரணை நடத்த முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
இந்த சமயத்திலே சுஷாந்த் சிங் ராஜ்புத் நண்பரான நடிகைநடிகை ரியா சக்ரபர்த்தியும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கூடாது. சிபிஐக்கு விசாரிக்க அதிகாரமில்லை. மும்பை போலீசார் தான் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதன் அடிப்படையிலேயே விசாரணை நடந்து இன்று உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
இந்த தீர்ப்பு படி சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ வழக்கை விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது. பீகாரில் பதிவு செய்யப்பட்ட செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை சட்டப்படி செல்லும் என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்து இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக 35 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை உச்ச இது மன்றம் வழங்கி இருக்கிறது.