மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூர். கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘தடக்’ படம் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் நடித்த ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’ படம் வெளியானது. உடல் மீது அதிக அக்கறை செலுத்தக்கூடிய ஜான்வி, ஜிம் பயற்சியும் மேற்கொண்டு வருகிறார்.
படப்பிடிப்பு, படப்பிடிப்பைவிட்டால் ஜிம் என எப்போதும் பிஸியாகவே ஜான்வி இருந்து வருகிறார். இதற்கிடையில் ஜான்வி கபூர் ஏழுமலையானைத் தரிசிப்பதற்கு ஆந்திர மாநிலம், திருமலை – திருப்பதி சென்றுள்ளார். இதனை அவர் தனது சமூக வலை தளமான இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸாக வெளியிட்டார்.