அமெரிக்காவில் பொது மக்கள் வாழும் வளாகத்தில் திடீரென ஏற்பட்ட குண்டு வெடிப்பு குறித்து காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அமெரிக்காவின் அட்லாண்டா என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த அட்லாண்டா பகுதியிலுள்ள பொதுமக்கள் வாழும் இடத்தில் திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட குண்டு வெடிப்பினால் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து குண்டு வெடிப்பினால் காயமடைந்த அந்த நபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் எவ்வாறு குண்டு வெடிப்பு ஏற்பட்டது என்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.