ஸ்விட்சர்லாந்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 40 வயதாகின்ற நபருக்கு நீதிமன்றம் 33 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்திலுள்ள ebikcon என்னும் பகுதியிலிருக்கும் வணிக வளாகம் ஒன்றிற்கு கடந்த 2018ஆம் ஆண்டு 40 வயதான நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை அதிகாரிகள் குறித்த வளாகத்திற்கு சென்று வெடிகுண்டை தேடியுள்ளார்கள்.
ஆனால் காவல்துறை அதிகாரிகளுக்கு அந்த வணிக வளாகத்திலிருந்து வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அதே நபர் மருத்துவமனை ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததோடு 2 தவணையாக பணமும் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அந்த நபர் காவல்துறை அதிகாரிகள் ரயில்வே நிலையத்தில் வைத்திருந்த பணத்தை எடுப்பதற்கு வரவில்லை. ஆகையினால் திரும்பி சென்ற போலீஸ் தீவிர தேடுதலின்பேரில் அந்த நபரை ரயில்வே நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளார்கள்.
இந்நிலையில் அந்த நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் அவருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.