மாலி நாட்டில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மாலி நாட்டில் உள்ள மொப்தி என்ற பகுதியில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கி சூடும் நடந்துள்ளது. அதில் ராணுவ வீரர்கள் 10 பேர் பலத்த காயமடைந்ததாகவும், 11 பேர் கொல்லப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ராணுவ படையினர் இந்த தாக்குதலில் சிக்கியிருப்பவர்களை மீட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.