பலுசிஸ்தான் நாட்டில் கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் எறிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் மூவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
பலுசிஸ்தான் நாட்டின் தலைநகரான குவெட்டாவின் விமான நிலைய சாலையில் இருக்கும் துர்பத் ஸ்டேடியம் பல வருடங்களாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில், அங்கு கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. அதனை காண ரசிகர்கள் பலர் கூடியிருந்தார்கள். அப்போது, திடீரென்று அந்த மைதானத்திற்கு அருகில் வெடிகுண்டு சத்தம் கேட்டிருக்கிறது.
உடனடியாக பாதுகாப்பு வீரர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு எறிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலில் ஒரு காவலர் உட்பட மூவர் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.