காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் இந்திய ராணுவ வாகனத்தின் மீது வெடி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவின் அரிஹல் பகுதியில் இந்திய ராணுவ வாகனம் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மீது வெடிகுண்டு வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழப்புகள் குறித்து இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 44 பேர் வீர மரணமடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி அழித்தது குறிப்பிடத்தக்கது.