Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடுத்தடுத்து நடந்த வெடிவிபத்து… முடிவுக்கு வராத கோர சம்பவம்… விருதுநகரில் பரபரப்பு…!!

சிவகாசியில் மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சம் குளத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் முடிவிற்கு வருவதற்கு முன் அங்குள்ள மற்றொரு பட்டாசு ஆலையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. அதாவது காக்கிவாடன்பட்டி பகுதியில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 120 பேர் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது, ரசாயன மருந்து கலவை தயாரிக்கும் இடத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்தால் அப்பகுதியில் கரும் புகை சூழ்ந்து காட்சி அளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து விட்டனர். இந்த வெடிவிபத்தில் படுகாயம் அடைந்த சுரேஷ் என்ற தொழிலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |