கல்குவாரியில் வெடி பொருட்கள் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹிரன்காவல்லியில் இருக்கும் கல்குவாரியில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகி விட்டனர். அதோடு இந்த விபத்தில் காயமடைந்தவரை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சட்டவிரோதமாக வாங்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியுள்ளது என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் இதுகுறித்து கனிம வளத்துறை அமைச்சர் முருகேஷ் இராணி கூறும்போது, இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்ட பின் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சிவமொக்காவில் நடந்த சம்பவம் போன்று மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.