பட்டாசு ஆலை திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அதில் இருந்த மூன்று அறைகளில் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகி விட்டது. இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து விட்டனர். இந்த விபத்து நடைபெற்ற சமயத்தில் ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.