ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதில் மூவர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் பால்க் மாகணத்திலுள்ள என்னும் பகுதியில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூவர் காயமடைந்ததாக கூறப்பட்டிருக்கிறது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறிய பேருந்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று அந்த மாகாணத்தினுடைய காவல்துறையின் செய்தித் தொடர்பாளரான முகமது ஆசிப் வஜிரி
தெரிவித்துள்ளார். இது குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தற்போது வரை எந்த அமைப்பினரும் பொறுப்பு ஏற்கவில்லை.