Categories
உலக செய்திகள்

காவல்நிலையத்தில் நேர்ந்த பயங்கரம்…. மூவர் உடல் சிதறி பலியான பரிதாபம்…என்ன நேர்ந்தது?…

இந்தோனேசிய நாட்டில் காவல் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் மூவர் உடல் சிதறிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசிய நாட்டின் பாண்டுங் நகரில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் வழக்கம் போல் நேற்று காவல்துறையினர் அணிவகுப்பு பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு மர்ம நபர், கையில் கத்தியுடன் காவல் நிலையத்திற்குள் புகுந்தார். இதனால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை சுற்றி வளைத்த போது, திடீரென்று அந்த நபர் தன் உடலில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தார். அதிக சத்தத்துடன் ஏற்பட்ட குண்டு வெடிப்பால் அந்த பகுதி முழுக்க பயங்கர புகை சூழ்ந்தது. காவல் நிலையத்தில் இருந்தவர்கள் பதறிக்கொண்டு வெளியில் ஓடினார்கள். இந்த கொடூர தாக்குதலில், தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதியும், இரண்டு காவல் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.

மேலும் அதிகாரிகள் ஏழு பேருக்கும், பொதுமக்களில் ஒரு நபருக்கும் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் சிலர் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பினரும் பொறுப்பேற்காத நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |