ஆப்கானிஸ்தான் நாட்டின் சந்தையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் நகரில் இருக்கும் கானி கைல் மாவட்டத்தின் ஒரு பெரிய சந்தையில் வழக்கம் போல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே, மக்களை பாதுகாக்க தலிபான் பாதுகாப்பு படை சோதனை பணியை மேற்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென்று சந்தைக்குள் புகுந்த ஒரு அரசாங்க அதிகாரியின் வாகனத்தில் குண்டு வெடித்தது.
இதில், அந்த பகுதி முழுவதும் அதிர்ந்து போனது. தாக்குதலில் பல கடைகள் தரைமட்டமானது. மேலும், இருவர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். பாதுகாப்பு படையைச் சேர்ந்த 5 வீரர்கள் உட்பட 28 நபர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.