மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகி 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலைநகர் காபூலின் வடக்கு பகுதியில் ஷகர் தாரா என்ற மாவட்டத்தில் ஹாஜி பக்ஷி என்ற மசூதி உள்ளது. இந்த மசூதியில் நேற்று மதியம் இறைவணக்கம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்ள எண்ணற்றோர் அங்கு வந்திருந்தனர். இதனிடையே மசூதியில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டு 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் மசூதியின் உள்ளே நடந்த குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை அதிகமாகதான் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.