Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு தாக்குதல்…. ஒருவர் உயிரிழப்பு….!!!

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும் 13 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் இருக்கும் சதார் பகுதியில் நேற்று இரவு நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 13 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதில் நான்கு பேர் உயிருக்குப் போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டு வெடிப்பின் போது, அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பலத்த சேதமடைந்திருக்கின்றன. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |