உக்ரைன் நாட்டின் அத்வீவ்கா எனும் நகரத்தில் இருக்கும் ஒரு பள்ளி ரஷ்ய படையினரால் குண்டுவீச்சு தகர்க்கப்பட்ட தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 18-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய படையினர் அந்நாட்டின் அத்வீவ்கா என்னும் நகரத்தில் இருக்கும் பள்ளி ஒன்றின் மீது இரவு நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது குறித்து அந்த மாநிலத்தின் ஆளுநரான பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்திருப்பதாவது, அத்வீவ்கா நகரில் ரஷ்ய படையினரால் இதோடு மூன்று பள்ளிகள் தகர்க்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக அவர்கள் டொனெட்ஸ்க் பகுதியில் 200 பள்ளிகளை அழித்து விட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.