Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கருமருந்து உராய்வு காரணமாக…. ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து…. பரிதாபமாக பறிபோன உயிர்கள்…!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் விசாகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மத்தாப்பு தீக்குச்சிகளை காய வைப்பதற்காக தொழிலாளர்கள் அதனை எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, கருமருந்து உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு அறைகள் தீப்பிடித்து எரிந்து உள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்பிறகு தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனையடுத்து இந்த விபத்தில் படுகாயமடைந்த புது ராஜா, வீராசாமி, நடராஜன் மற்றும் பஞ்சவர்ணம் போன்ற நான்கு பேரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் புது ராஜா, வீராசாமி, நடராஜன் என அடுத்தடுத்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் பஞ்சவர்ணத்திற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |