Categories
உலக செய்திகள்

எச்சரிக்கையை பொருட்படுத்தாத பொதுமக்கள்…. தீவிரவாதிகளின் வெறியாட்டம்…. கண்டனம் தெரிவித்த அதிபர்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தின் முன்பாக கூடியிருக்கும் பொதுமக்களின் மீது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர்கள் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அந்நாட்டிலுள்ள ஆப்கானியர்களும், வெளிநாட்டவர்களும் பிற நாடுகளுக்கு தப்பிச்செல்ல முயன்று வருகிறார்கள்.

ஆகையினால் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருக்கும் விமான நிலையத்தின் முன்பாக ஏராளமானோர் குவிந்துள்ளார்கள். இதற்கிடையே காபூல் விமான நிலையம் முன்பாக கூடியிருக்கும் பொதுமக்களின் மீது தீவிரவாத படைகள் தாக்குதல் நடத்தலாம் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்கள் காபூல் விமான நிலையத்தி முன்பாக பசியும் பட்டினியுமாக காத்துக்கிடக்கும் பொதுமக்களின் மீது இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

இதனால் அமெரிக்க வீரர்கள் உட்பட 73 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |