நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் சிறுவர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானை, காட்டுப்பன்றி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த பகுதிகளில் விளைவிக்கப்பட்ட பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் விவசாயிகள் அவுட்டுகாய் என்ற நாட்டு வெடிகுண்டை பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் குன்னூரில் இருக்கும் ஒரு வீட்டில் கண்ணன் மற்றும் அபு என்ற இரண்டு வாலிபர்கள் நாட்டு வெடிகுண்டை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனை பார்ப்பதற்காக ஸ்ரீராம் என்ற சிறுவன் அங்கு சென்றுள்ளார்.
இதனை அடுத்து எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் அந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஸ்ரீராம், அபு, கண்ணன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அதன்பின் அருகில் உள்ளவர்கள் உடனடியாக படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 28ஆம் தேதி இதே போல் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் நாய் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.