Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அங்க பத்திரமாக தான் வச்சேன்… வெடித்து சிதறிய வெடிகள்… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

வான வேடிக்கை வெடிகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவிழா சமயங்களில் வானவெடி வைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவ்வாறு திருவிழாவிற்காக வாங்கி மீதமிருந்த 18 வான வெடிகளை கண்ணன் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்ட கழிவறையில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

இந்நிலையில் வெப்பம் தாங்காமல் அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து வான வெடிகளும் வெடித்து சிதறிவிட்டது. மேலும் இந்த விபத்தில் அருகிலிருந்த ஆடு கட்டும் பட்டியும் தீப்பிடித்து எரிந்து விட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து ராம்ஜிநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |