பிரிட்டனில் தற்கொலை தாக்குதல் செய்ய முயன்று உயிரிழந்த பயங்கரவாதி தங்கியிருந்த வீட்டில் வசித்த இலங்கை நபர் முக்கிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
பிரிட்டனிலுள்ள லிவர்பூல் நகரின் மகளிர் மருத்துவமனைக்கு அருகில் தற்கொலை தாக்குதல் செய்ய முயன்ற நபர், வாகனத்திற்குள் இருக்கும் போது குண்டு வெடித்து உயிரிழந்தார். இச்சம்பவத்தை பயங்கரவாத தாக்குதலாக அறிவித்தனர். இந்நிலையில், Emad Jamil Al Swealmeen என்ற அந்த தற்கொலை தாக்குதல் பயங்கரவாதி, புகலிட கோரிக்கையாளர்கள் பலரோடு சேர்ந்து ஒரு வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு குடியிருப்பு வசதி அளிக்கக்கூடிய செர்கோ, இந்த கட்டிடத்தை நிர்வகித்து வருகிறது. சுமார் 10 வருடங்களைத் தாண்டி இந்த குடியிருப்பில் புகலிடக்கோரிக்கையாளர்கள் வசித்து வருகிறார்கள். அந்த குடியிருப்பு அதிக இரைச்சலுடனும் மக்கள் கூட்டத்துடனும் தான் இருக்கும்.
அந்த குடியிருப்பில் அதிக நாட்களாக தங்கியிருந்த, டிஜே ஜெயவீரா என்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் தெரிவித்துள்ளதாவது, குடியிருப்பின் படுக்கை அறையின் சுவர்களை மெலிதான ஒட்டு பலகையால் செய்துள்ளனர். அதிக சத்தத்தால் இரவில் தூங்க முடியாது. குடியிருப்பு, அதிக சத்தத்துடனும், சுத்தமில்லாமலும் இருக்கும்.
என்னை போல புகலிடக்கோரிக்கையாளர்கள் பலரும் அங்கு வந்து செல்வதுண்டு. எனினும் நான் அதிக காலம் அங்கு தான் தங்கியிருந்தேன். குடியிருப்பின் நிலை தொடர்பில் புகார் அளித்து மேலாளருக்கு, சில முறை மின்னஞ்சல்கள் அனுப்பியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.