Categories
திருவாரூர் மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : திருவாரூரில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் பிரசவம் ஆன நிலையில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்த நிலையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே கன்னியாகுமரியில் மேலும் 3 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அச்சன் குளத்தை சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மகள் மற்றும் முழங்குழியை சேர்ந்த 22 வயது இளைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று பேரும் நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 12 வயதுக்குட்பட்ட 1003 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 13,916 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,358 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் இதுவரை 16,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8,324 பேர் குணமடைந்துள்ள நிலையில், 111 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |