Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது வித்தியாசமா இருக்கே…. பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி…. உற்சாகமாக கண்டுகளித்த பொதுமக்கள்…!!

100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி பொம்மலாட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நகராட்சி சுகாதார பிரிவு சார்பில் பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் சாகுல் ஹமீது தலைமை தாங்கி துவக்கி வைத்துள்ளார். இதனையடுத்து 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோ, பிச்சை பாண்டி, சரத்பாபு போன்றோர் முன்னிலை வகித்தனர். அதன் பின்  பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் அனைவரும் பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டுகளித்துள்ளனர்.

Categories

Tech |