Categories
தேசிய செய்திகள்

குறிப்பிட்ட சில வழித்தடங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் முடங்கியது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 67,152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 3ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ள நிலையில் மே 17ம் தேதிக்கு பின்னர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதனிடையே நாடு முழுவதும் வரும் 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என்று தெரிவித்திருந்தது. புதுடெல்லியில் இருந்து, மும்பை, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் செகந்திராபாத், பெங்களூர், அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், அகர்தலா, ஹவுரா,

பாட்னா, பிளாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர்உள்ளிட்ட 15 நகரங்களை இணைக்கும் விதமாக இரு மார்க்கங்களிலும் 30 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில் அதற்கான முன்பதிவு தொடங்கியது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. காத்திருப்பு அல்லது ஆர்ஏசி டிக்கெட் முன்பதிவு செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் பதிவு செய்ய முயன்றதால் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியுள்ளது.

Categories

Tech |