Categories
உலக செய்திகள்

“பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரான் வைரஸை எதிர்க்கும்!”…. ஆய்வில் வெளியான தகவல்…!!

பைசர் மற்றும் பயோ டெக் நிறுவனங்கள், ஒமிக்ரானை எதிர்க்கக்கூடிய ஆன்டிபாடிகளை உடலில் அதிகரிக்கும் ஆற்றல் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.

பைசர் மற்றும் பயோ என்டெக் நிறுவனங்கள், இரண்டு தவணை தடுப்பூசிகள் பிற கொரோனா மாறுபாடுகளை எதிர்த்து செயல்படுகிறது என்றும் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தினால், ஒமிக்ரான் வைரஸிற்கு எதிரான ஆண்டிபாடிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் ஆய்வில் தெரிய வந்திருப்பதாக தெரிவித்துள்ளன.

மேலும், இது தொடர்பில் முதல்கட்ட ஆராய்ச்சி முடிவுகள் தயாராக இருக்கிறது என்றும், அடுத்த கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இன்னும் நூறு நாட்களுக்குள் மருந்து, விற்பனைக்கு தயாராகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அனுமதி கோரியிருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |