கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை பூஸ்டர் தவணை தடுப்பூசிகள் 90% வரை குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவின் ஆய்வாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது, பூஸ்டர் தடுப்பூசி கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை 90% வரை குறைக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். டெல்டா வைரஸ் பரவிய போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், பூஸ்டர் தடுப்பூசி உயிரிழப்பு விகிதத்தை குறைத்தது என்று இஸ்ரேல் நாட்டின் ஆய்வாளர்கள் கண்டறிந்ததாக அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களை விட பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு 10% பரவல் விகிதம் மற்றும் 90% உயிரிழப்பு விகிதம் குறைந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.