உலக சுகாதார மையம் அவசிய தேவையுள்ள மக்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசியளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.
உலக சுகாதார மையம், கடந்த வருடத்தில் பணக்கார நாடுகள் பூஸ்டர் தவணை தடுப்பூசிகளை 2021 வருட கடைசியில் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதாவது, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதற்காக இவ்வாறு தெரிவித்திருந்தது.
மேலும், உலக சுகாதார மையம், பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசிகளின் பூஸ்டர் தவணைகளை வயதானோர், சுகாதார ஊழியர்கள் போன்றோருக்கு செலுத்த பரிந்துரைத்தது. இதனையடுத்து தடுப்பூசி நிபுணர் சௌமியா சுவாமிநாதன் நேற்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, மிகவும் அவசிய தேவையுள்ளவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசியை அளிக்க உலக நாடுகளை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.