தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த 7 உயிரிழந்த நிலையில் 19 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். கொரோனாவால் அதிகம் பாதித்த மாவட்டமாக 149 பேருடன் சென்னை முன்னணி வகிக்கின்றது.
அதனை தொடர்ந்து கோவையில் 64 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு 8ஆவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 45 வயது நபர் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.
தற்போது இறந்துள்ள இவரின் இறப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வேலூரில் கொரோனா பாதித்து 6 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.