இந்தியாவின் எல்லையில் சீனா மற்றும் இந்திய வீரர்களுக்கு இடையே மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது. அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள தவாங் பகுதிக்கு அருகே உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி ஊடுருவி வேலி அமைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு 17,000 அடி உயர சிகரத்தின் உச்சியை சீன வீரர்கள் 300 பேர் அடைய முயற்சி செய்தபோது அந்த முயற்சி இந்திய வீரர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் இருதரப்பு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் சீன வீரர்களுக்கு அதிக அளவில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கடந்த 9-ம் தேதி நடைபெற்றுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையில் நடைபெற்ற மோதல் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அருணாச்சல பிரதேசத்தில் எல்லை பகுதியில் சீன ராணுவத்தின் ஜெட் விமானங்கள் பறக்க ஆரம்பித்துள்ளதால் இந்திய நாட்டின் விமானப்படையும் வான் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Fierce hand to hand combat between brave Indian Soldiers and Chinese Army in Tawang sector#ArunachalPradesh #Tawang #VibesofIndia pic.twitter.com/nO8malOoWZ
— Vibes of India (@vibesofindia_) December 13, 2022