14 மாத சிறை தண்டனைக்குப் பிறகு உரிய ஆவணங்கள் இல்லாமல் நாடு செல்ல முடியாமல் தனித்து வந்த நிலையில் இன்று சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை மீனவர்கள் இரண்டு பேர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து தண்டனை காலம் முடிந்த பிறகும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்களால் சொந்த நாட்டுக்கு செல்ல முடியவில்லை. பின் இது குறித்து தகவல் அறிந்த சென்னை மாநகர மாவட்ட சட்ட பணிகள் ஆணைய செயலாளர் ஜெயந்தி,
இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்டு ஆவணங்கள் தயார் செய்து அவர்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்தார். இதை அடுத்து விமானம் ஏறி சென்னை விமான நிலையம் வந்த அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, எங்கள் மீது சுமத்தப்பட்ட புகார் பொய் புகார் எனவும் அவற்றை நாங்கள் நிரூபித்த பின்பே விடுதலை செய்யப்பட்டனர் எனவும் தெரிவித்தனர். மேலும் ஆவணங்கள் இன்றி தவித்த எங்களுக்கு உதவிய சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் ஜெயந்தி அவர்களுக்கு நன்றியும்தெரிவித்து கொண்டனர்.