பிரித்தானிய உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேலுக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் இடையே பெண்களுக்கு எதிரான புதிய பாதுகாப்பு சட்டத்தை புறக்கணித்தது தொடர்பாக பதற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் இசை நிகழ்ச்சிகள், தெருக்கள், மது கடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் அதிகரித்துள்ளது. இதனால் பொது இடங்களில் பெண்களுக்கு நேரும் பாலியல் வன்கொடுமைகளை ஒரு குற்றமாக கருதி அதற்கான சட்டரீதியான மதிப்பாய்வை பிரித்தானியாவின் உள்துறை அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கடந்த வாரம் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பொது இடங்களில் பெண்களுக்கு நேரும் துன்புறுத்தல்களுக்கு எதிரான புதிய பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரும் முயற்சிகளை புறக்கணித்துள்ளார்.
இதன் காரணமாக கோபமடைந்த பிரித்தானிய உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்களை “ஓநாய் ஊளையிடும்” விஷயம் போல் பிரதமர் போரிஸ் ஜான்சன் கருதுவது கவலையை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். எனவே ப்ரீத்தி பட்டேலுக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் இடையே பதற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை கையாள்வது குறித்து 180,000 பங்களிப்பாளர்களிடமிருந்து பட்டேலின் ஆலோசனை கருத்துக்களை பெற்றுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பொது மக்களின் மனநிலையை பிரதமர் போரிஸ் ஜான்சன் முற்றிலும் தவறாக கணித்து விட்டார் என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களும் எழுந்துள்ளது. ஆனால் ப்ரீத்தி பட்டேல் பெண்களுக்கான பாதுகாப்பான இடமாக பிரித்தானியாவை மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.