இங்கிலாந்து பிரதமராக மீண்டும் பொறுப்பேற்ற போரில் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமாரக போரில் ஜான்சன் மீண்டும் பதவியேற்றுள்ளார். இவருக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த அதிபர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்திய பிரதமர் மோடி போரில் ஜான்சன்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பிரிட்டனுடன் தொடர்ந்து நட்புறவை நீடிக்க புதிய பிரதமருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடலில் இந்திய தூதரகம் மீது நடந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி புகார் அளித்தார். அண்மையில் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் முன்கூட்டிய பெருங்கூட்டம் வன்முறையில் ஈடுபட்டதாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்ட போரிஸ் ஜான்சன் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் பாதுகாப்பு அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.