கங்கை ஆற்றில் பிறந்து 22 நாளான பெண் குழந்தை மரப்பெட்டியில் மிதந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டம் வழியாக செல்லும் கங்கை ஆற்றில் ஒரு மரப்பெட்டி மிதந்து வந்தது. அந்த பெட்டி கரை ஒதுங்கிய நிலையில், அதிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது. பின்னர் அந்த வழியாக படகோட்டி கொண்டு வந்த நபர் ஒருவர் பெட்டியில் இருந்து அழுகுரல் வருவதை கண்டு அதை திறந்து பார்த்தார். அப்போது சிவப்பு நிற பட்டாடை உடன் ஒரு குழந்தை இருந்தது. மேலும் அந்த பெட்டியில் குழந்தையின் ஜாதகமும், இந்து தெய்வங்களின் படங்களும் இருந்தது.
https://twitter.com/ians_india/status/1405087649312899080
பின்னர் குழந்தையை மீட்ட படகோட்டி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிறந்து 22 தினங்களான அந்த குழந்தையை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். மேலும் குழந்தையின் முழு பொறுப்பை உத்திரப்பிரதேச அரசு ஏற்றுக் கொள்ளும் எனவும், அதற்கு சரியான வளர்ப்பை உறுதி செய்வதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். மேலும் கங்கை ஆற்றில் இந்த குழந்தை மிதந்து வந்ததால் இந்த குழந்தைக்கு கங்கா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.