திட்டக்குடி அருந்தியர் தெருவில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை தெருநாய்கள் கவ்வியபடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை அப்பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் கவ்வி செல்வதைப் பார்த்த பொதுமக்கள் நாயை துரத்தி குழந்தையை காப்பாற்றினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இது போல இறந்த குழந்தைகள் இப்பகுதியில் தொடர்ச்சியாக போடுவதாகவும். மருத்துவ கழிவுகள் இப்பகுதியில் போடுவதாகவும், இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறினர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை கைப்பற்றி குழந்தையை யாருடையது, யார் வீசி சென்றது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.