செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை ஒன்றிணைப்பேன் என சசிகலா சொன்னது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். சசிகலாவை பொறுத்தவரையில் பார்த்தீர்கள் என்றால், கட்சிக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, சம்பந்தமும் இல்லை. கட்சியில் ஒற்றுமையா எல்லாரும் போய்க்கொண்டு தான் இருக்கிறார்கள் எடப்பாடியார் தலைமையில், எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் அவர்கள் சொல்வது எல்லாமே முழுக்க முழுக்க வடிகட்டின பொய்.
பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த பொய்யான உருவான உருவம் என்றால் அது சசிகலா தான். சமூக வலைத்தளங்களில் போய்க்கொண்டிருக்கிறது என்னவென்றால், திரு ஸ்டாலின் என்ன சொல்கிறார் என்றால் ? 5000 ரூபாய் கொடுக்கணும் என்று, அதெல்லாம் வந்துதா ? இல்லையா. இப்போது ஆட்சியில் வந்திருக்கிறார் 5000 ரூபாய் கொடுக்க வேண்டியது தானே, ஏன் ஆயிரம் ரூபாய் கொடுக்கீறீர்கள். நாங்கள் கார்டில் வித்தியாசம் பார்க்கவில்லை.
இரண்டு கோடி குடும்பங்களுக்கு நாங்கள் எல்லோருக்கும் கொடுத்தோம், வெள்ளை கார்டு, பச்சை கார்டு உள்பட காவல்துறையினருக்கும் கொடுத்தோம். அந்த மாதிரி எல்லா கார்டுக்கும் பாரபட்சம் இல்லாமல் கொடுத்தோம். பொங்கல் விழாவை பொறுத்தவரையில் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்கின்ற அடிப்படையில் பாரபட்சம் இல்லாமல் இரண்டு கோடி குடும்பங்களுக்கு கொடுத்தோம். இப்போ கொடுப்பதே ஆயிரம் ரூபாய்… அதிலும் இந்த கார்டுக்கு இருக்கு, இந்த கார்டுக்கு இல்லை, கரும்பு இல்லை என தெரிவித்தார்.