நாய்க்குட்டி ஒன்று விசித்திரமான முறையில் பிறந்துள்ளது அனைவரிடையேயும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள அக்லான் நின்ற மாகாணத்தில் ஒரு நாய் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. முதல் நாய்க்குட்டி வழக்கம் போல சாதாரணமாக இருந்துள்ளது .ஆனால் இரண்டாவது பிறந்த நாய்க் குட்டியானது முற்றிலும் வேறுபட்டு இருந்துள்ளது. அந்த நாய்க்குட்டி வெளிர் நிறம் உள்ளதாகவும், பிறந்தவுடனேயே சுவாசிக்க சிரமப்பட்டும் இருந்துள்ளது. அந்த னைக்குட்டியானது இரண்டு நீளமான பெரிய நாக்குகள் ஒட்டிக்கொண்டிருந்த நிலையில் இருந்துள்ளது.
மேலும் அதற்கு ஒரு கண்தான் இருந்துள்ளது. பார்ப்பதற்கு ஏலியன்ஸ் போலவே இருந்த விசித்திரமான அந்த நாய்க்குட்டி ஒரு நாள் மட்டுமே இருந்து பின்னர் உயிரிழந்துள்ளது. ஒருவேளை அந்த தாய் கர்ப்பமாக இருந்தபோது நச்சுக்களை ஏதாவது சாப்பிட்டு இருக்கலாம் இது தான் அதற்கு காரணம் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.