Categories
உலக செய்திகள்

“பதவிக்கு தான் பாஸ் மவுசு” சரியா தான் இருக்கு…. ட்ரம்பின் நிலை இது தான்…!!

அதிபர் ட்ரம்ப் தோல்வியுற்ற பிறகு அவருடைய வலைதள கணக்கை லட்சக்கணக்கானோர் அன்-பாலோ செய்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஏற்க மறுத்து வந்தார். எனவே பாய்டனின் வெற்றி குறித்து பல்வேறு வழக்குகள் தொடர்ந்த நிலையில் அவருடைய வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த சமயத்தில் அதைப் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எப்பொழுதும் ஏதாவது பதிவிட்டு கொண்டுவருவார். எப்பொழுதும் டுவிட்டரில் ரொம்ப ஆக்டிவாக இருப்பவர் ஆவார்.

இவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற பிறகு அவருடைய கணக்கை 3,68,843 பேர் அண்- பாலோ செய்துள்ளனர். முக்கியமாக டுவிட்டர் நிறுவனத்தின் CEO ஜாக் டோர்ஸியும் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை அன்-பாலோ செய்துள்ளார். அதே நேரத்தில் ஜோ பைடனின் பாலோவர் எண்ணிக்கை 21.6 மில்லியனாக அதிகரித்துள்ளது. எனவே பதவி இருந்தால் தான் ஒருவருக்கு மவுசு என்பதை காட்டும் விதமாக இது அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |