சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் மகன் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் தாயார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள சிவதாபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்தார். வெள்ளி தொழிலாளியாக பணிபுரியும் இவர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செல்வராஜ் இறந்து விட்டார்.
இதனையடுத்து செல்வராஜின் உடல் தகனம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென செல்வராஜின் தாயார் அம்மாசி மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.