Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 12 கோடி ரூபாய்க்கு விற்பனை… காத்திருந்து வாங்கிய மது பிரியர்கள்… கடைகளில் அலைமோதிய கூட்டம்…!!

ஊரடங்கின் காரணத்தால் மது கடையில் 12 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் அதை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனை அடுத்து முழு ஊரடங்கின் போது மளிகை கடைகள் மற்றும் காய்கறிக்கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 113 மதுக்கடைகளில் 12 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யபட்டுள்ளது. மேலும் அம்மாவட்டத்தில் நேற்று மதுக்கடைகள் மூடுவதற்கு முன்னர்  மது பிரியர்கள்  வரிசையில் காத்திருந்து மது பாட்டில்களை அதிகமான அளவில் வாங்கி சென்றனர்.

Categories

Tech |