Categories
அரசியல் மாநில செய்திகள்

“பெட்டிக்குள் பெட்டி வைத்து பொய் பிரச்சாரம் மேற்கொள்ளும் ஸ்டாலின்”…. முதலமைச்சர் பேச்சு..!!

பெட்டிக்குள் பெட்டி வைத்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் ஸ்டாலின் என்று முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

3 நாள் சுற்றுப்பயணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது நாளான இன்று காலை நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை தீர்ப்பதற்காக மனுக்களை பெற்று வருவதாகவும் அதனை வாங்கி ஒரு பெட்டியில் போடுவதாகவும். குறிப்பிட்ட அந்த மனுக்கள் பெட்டிக்குள் இன்னொரு பெட்டி இருப்பதாகவும், அதில் ஏற்கனவே தயார் செய்து வைத்த கேள்விகளும், அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவர்களிடம் மட்டுமே குறைகளை கேட்பதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |