மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள இந்த திரைப்படம் 12 ஆம் நாள் கழித்து ரூ .115 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் இதுவரை இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடாக மாஸ்டர் திரைப்படம் வெளிவந்துள்ளது.
உலகளவில் படத்தின் வசூலானது ரூ 200 கோடி ஆகும். இதில் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே ரூ .100 கோடி வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இறுதிக்குள் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் ரூ .115 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.