பிறந்து சில மணி நேரமேயான ஆண் குழந்தையை ஏரியில் வீச சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல்புத்தூர் கிராமத்தில் ஏரிக்கரை அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 27 – ம் தேதியன்று பொதுமக்கள் சிலர் அந்த ஏரிகரைக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் சென்று பார்த்த பொதுமக்கள் பிறந்து சிலமணி நேரமேயான ஆண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு ஏரியில் வீசப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.