பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்ததால், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்கொல்லை காளியம்மன் கோவில் தெருவில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டு உள்ளார். ஆனால் பாலாஜியின் விருப்பத்தை அவரது பெற்றோர்கள் ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த பாலாஜி மதுவில் விஷத்தை கலந்து குடித்து தனது வீட்டின் அருகே உள்ள மாட்டுக் கொட்டகையில் மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக பாலாஜியை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட முதலுதவிக்குப் பின் அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி, பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.