பிரிட்டனில் வெப்பநிலை தாக்கத்தினால் கடந்த 7 நாட்களில் சிறுவர்கள் உட்பட சுமார் 18 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள்.
பிரிட்டனில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. எனவே வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் கடற்கரைகளிலும் ஏரிகளிலும் தஞ்சம் அடைகிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள Cheshire கவுன்டி என்ற பகுதியில், அதிக வெப்ப நிலையைத் தாங்க முடியாமல் 16 வயதுடைய சிறுவன் Dee நதியில் நீராட சென்றிருக்கிறார்.
அப்போது சிறுவன் மாயமானார். எனவே சுமார் ஏழு மணி நேரங்களாக அச்சிறுவனை தேடும் பணி நடைபெற்றது. எனினும் ஆற்றிலிருந்து சிறுவனை சடலமாகத்தான் மீட்டனர். இதற்கு முன்பு Knottingley – Goole கால்வாய், Trent நதி, Stanborough ஏரி மற்றும் Crosby கடற்கரை, போன்ற பல்வேறு இடங்களில் பல மக்கள் உயிரிழந்தார்கள்.
இவர்கள் அனைவருமே, வெப்பத்தை தாங்க முடியாமல் நீரில் குளிக்கச் சென்றவர்கள் தான். இதனிடையே அதிகாரிகள் இவ்வாறான நதி, ஏரி மற்றும் குளங்களில் குளிப்பதும், நீச்சலடிப்பதும் அபாயகரமானது என்று எச்சரிக்கிறார்கள். எனினும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.